மண்ணடுக்காய்வு மண் + அடுக்கு + ஆய்வு. மண்ணடுக்காய்வு என்பது புவியின் வெளிப்புற அடுக்கில் காணப்படும், மண் அடுக்குகளை ஆய்வதாகும். இது நிலப் பொதியியலின் ஒரு உட்பிரிவாகும். இது மண்ணைப் பகுப்பாய்வு செய்யும் மண்ணியலிலிருந்து வேறுபட்டது.
மண்ணடுக்காய்வு தொல்லியலில் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் Stratigraphy எனப்படும். இலத்தீன் மொழியில் ஸ்டிரேட்டம் (Stratun) என்பது மண்ணடுக்கைக் குறிக்கும். இது ஆங்கிலத்தில் Layer எனப்படும் (படம் 1), (படம் 2). மண்ணடுக்காய்வு, தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் தொல்பொருள்களை காலவாரியாக வகைப்படுத்தி பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. மண்ணடுக்காய்வு குறித்த விதிமுறைகளை ஸ்மித் என்பவர் கண்டறிந்தார். மண்ணடுக்காய்வின் சிறப்பான விதி ஒரு இடத்தில் காணப்படும் மண்ணடுக்குகளில் அடியிலுள்ள மண்ணடுக்கு காலத்தால் முற்பட்டது. மேலே உள்ள மண்ணடுக்கு காலத்தால் பிற்பட்டது. இவ்விதிமுறை இயல்பாக அமைந்த, பாதிக்கப்படாத மண்ணடுக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். மண்ணடுக்குகள் நில நடுக்கத்திலோ வேறு காரணிகளலோ சேதமடைந்திருந்தால், இவ்விதி பொருந்தாது. மண்ணடுக்காய்வு மண்ணடுக்குகளை ஆராயும் போது பிற்காலக் குழிகள், எலிப் பொருந்துகள் போன்றவை மண்ணடுக்கைச் சேதப்படுத்தி உள்ளனவா என ஆராயவேண்டும். குழிகளிலுள்ள தொல்பொருட்களைத் தனியாகப் பிரிக்கவேண்டும். அப்போது தான் அகழாய்வு சிறப்பானதாக அமையும். மண்ணடுக்கு மண்ணடுக்கு என்பது ஒரு இடத்தில் காணப்படும் மண்ணின் தொகுப்பு ஆகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் உருவான மண்ணடுக்கு ஒரே நிறம், ஒரே மாதிரியான உள்ளடக்கம் (Contents) ஒரே மாதிரியான தன்மை ஆகியவற்றைப் பெற்றிருக்கும். மண்ணடுக்குகளில் தொல்பொருள்கள் இருந்தால் அது பண்பாட்டு மண்ணடுக்கு எனப்படும். இல்லையென்றால் அது இயற்கை மண் அல்லது கன்னி மண் எனப்படும். மேற்கோள் நூல் Renfrew,C, and Paul Bahn, 1994. Archaeology, Theory and Practice. Thames and Hodsen. |